கலாநிதி மாறன் காசுக்கு ஆசைப்பட்ட பூஜா ஹெக்டே.. சர்ச்சையில் சிக்கிய சம்பவம்

Vijay Pooja Hegde Sun Pictures
6 நாட்கள் முன்
Kathick

Kathick

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்தியளவில் மிகவும் பிரபலமான முன்னணி கதாநாயகி பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் சமீபத்தில் தமிழில் வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். விஜய் கதாநாயகனாக நடித்து வெளிவந்த இப்படம் மாபெரும் சொதப்பல் ஆனாது. பலரும் இப்படத்தை வெச்சு செய்து வருகிறார்கள்.

இப்படத்தை கலாநிதி மாறனின் சன் பிச்சர்ஸ் தயாரித்திருந்தது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை பூஜா ஹெக்டே, தன்னுடைய உதவியாளர்கள் என்று 12 நபர்களை அழைத்து வந்துள்ளாராம். அவர்களுக்கு உணவு மற்ற செலவு என தயாரிப்பு நிறுவனத்திடம் காசு வாங்கி செலவு செய்துள்ளாராம் பூஜா ஹெக்டே.

படப்பிடிப்புக்கு முன் பூஜா ஹெக்டேவின் உதவியாளர்களுக்கு அநாவசியமாக செலவு செய்யக்கூட என்று தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளார்களாம். ஆனால், அதையும் மீறி பூஜா இப்படி நடந்துகொண்டுள்ளார். சமீபத்தில், பீஸ்ட் படத்தின் கண்ணகை மீண்டும் ஒரு முறை ஆய்வு செய்துள்ளார்கள் தயாரிப்பு நிறுவனம்.

அப்போது பூஜா ஹெக்டே அநாவசியமாக அவருடைய உதவியாளர்களுக்கு செலவு செய்துள்ளதை கண்டுபிடித்துள்ள தயாரிப்பு நிறுவனம், அந்த தொகையை திரும்ப தரவேண்டும் என்று அறிவுறுத்தி இருப்பதால், தற்போது அந்த பணத்தை தயாரிப்பு நிறுவனத்திடம் கொடுக்கும் முடிவு செய்துள்ளாராம் பூஜா ஹெக்டே.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.