இரவு பார்ட்டியில் பிரபல இயக்குனருடன் நெருக்கம்! நடிகை பூஜா ஹெக்டே
முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியானவர் நடிகை பூஜா ஹெக்டே. அப்படம் மிகப்பெரிய வெற்றி பெறாததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.
சினிமாவில் அறிமுகமாகி தற்போது 10 ஆண்டுகளாகிய பூஜா ஹெக்டே முன்னணி நடிகையாகவும் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார். அல்லு அர்ஜுனுடன் ஆலவைகுந்தபுரமுலு படத்தில் ஜோடிப்போட்டு ஹிட் கொடுத்தப்பின் பூஜாவின் மார்க்கெட் அதிகரித்தது.
அதன்பின், நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்தார். பின் சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் நடித்த ஆச்சாரியா படத்திலும் நடித்தார். இரு படங்களும் தோல்வியை அடைந்த நிலையில் பூஜா தற்போது மூன்று பாலிவுட் படங்களில் கமிட்டாகியுள்ளார்.
சமீபத்தில் கூட பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு ரசிகர்களை ஈர்த்தார். இந்நிலையில் பிரபல இயக்குனரான கரண் ஜோகரின் 50வது பிறந்தநாள் மும்பையில் பிரம்மாண்டமான முறையில் இரவு பார்ட்டி நேற்றிரவு நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பூஜா ஹெக்டே கரண் ஜோகருடன் நெருக்கமாக ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளார். தற்போது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி என்னம்மா பூஜா இதெல்லாம் என்று கிண்டலடித்து வருகிறார்கள்.