கூலி ஆடியோ லான்ச்!! பூஜா ஹெக்டே வராததற்கு காரணம் இதுதானாம்...
கூலி படம்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, உபேந்திரா, செளபின் சாஹீர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், அமீர்கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது கூலி படம்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்த நிலையில் மோனிகா பாடல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்பாடலுக்கு நடிகை பூஜா ஹெக்டே ஆடிய ஆட்டம் இணையத்தில் டிரெண்ட்டாகி வருகிறது.
இந்நிலையில், நேற்று ஜூலை 2 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் கூலி படத்தின் ஆடியோ லான்ச் மற்றும் டிரைலர் லான்ச் நிகழ்ச்சி நடைபெற்றது.
பாலிவுட் நடிகர் அமீர் கான் முதல் படத்தில் நடித்த முக்கிய கலைஞர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆனால் மோனிகா பாடலுக்கு ஆட்டம் போட்ட நடிகை பூஜா ஹெக்டே கலந்து கொள்ளவில்லை.
பூஜா ஹெக்டே
அப்பாடலுக்கு நிகழ்ச்சியில் அவர் ஆடுவார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நிலையில் பூஜா ஹெக்டே, காஞ்சனா 4 படத்தில் ஷூட்டிங்கில் பிஸியாக் இருப்பதால் தான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.