மாற்றிக்கொள்ள ஆடையின்றி தவித்த நடிகை பூஜா ஹெக்டே! இதக்கூடவா கவனிக்காம போவீங்க!!

Beast Pooja Hegde
By Edward May 23, 2022 11:30 AM GMT
Report

முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை பூஜா ஹெக்டே. 10 வருடங்களுக்கு பிறகு நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்தார். தெலுங்கி சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வந்த பூஜாவிற்கு பீஸ்ட் படம் தோல்வியால் நல்ல வர்வேற்பு பெறாமல் போனார்.

இதன்பின் க்ளாமர் போட்டோஷூட் என பிஸியாக இருந்த பூஜா நடிகர் சல்மான் கான் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளாராம். இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் புகழ்பெற்ற விருதாக கருதப்படும் 75வது கேன்ஸ் விருது விழா 17 ஆம்தேதி ஆரம்பித்து 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

உலக திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு வருகிறார்கள். முதன்முதலில் சென்றுள்ள பூஜா ஹெக்டே ஆடை விசயத்தில் சில பிரச்சனையில் சிக்கி இருந்தாராம். மும்பையில் இருந்து கிளம்பும் போது தன்னுடைய மேக்கப் பொருட்களை விலையுயர்ந்த ஆடைகள் அடங்கிய சூட்கேஸ் காணாமல் போனதாம்.

இதனால் விருது நிகழ்ச்சியில் மாற்றிக்கொள்ள மாற்று ஆடையில்லாமல் தவித்துள்ளாராம். மேலும் அங்கு சென்று ஆடைகளை வாங்கியும் கையில் இருந்த மேக்கப் பொருட்களை பயன்படுத்தியும் தான் விருதுக்கே சென்றிருக்கிறாராம் பூஜா ஹெக்டே.