சொந்த வீடு கட்ட அடுத்தவர் வீட்டை இடித்துவிட்டார்!! அதிர்ச்சி கொடுத்த நடிகை பூனம் கவுர்..
சமந்தா
இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் சில திரைப்படங்களை கமிட் செய்துள்ளார் விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளிவரும். நடிப்பு மட்டுமின்றி சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார்.
அந்த நிறுவனத்தின் கீழ் சுபம் என்ற படத்தை தயாரித்து உள்ளார். நடிகை சமந்தா பிரபல இயக்குநர் ராஜ் நிடிமோரு உடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருவது எல்லோருக்கும் தெரிந்தது தான்.
இவர்கள் ஜோடியாக வெளியில் செல்லும் போட்டோ, வீடியோ எல்லாம் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் இருவரும் திடீரென திருமணம் செய்து அனைவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

பூனம் கவுர்
இந்நிலையில், நடிகை பூனம் கவுர் பதிவிட்ட ஒரு பதிவு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதில், சொந்த வீடு கட்டுவதற்காக இன்னொருவர் வீட்டை இடிப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
பலவீனமான ஆண்களை பணத்தால் வாங்கலாம், அந்த அகங்காரப்பெண்ணை பெய்டு பி ஆர் பெரிய ஆளாக காட்டுகிறது என்று டிவிட் போட்டுள்ளார். இந்த பதிவை வெளியிட்டு சமந்தாவின் இரண்டாம் திருமணத்தை மனதில் வைத்து இப்படி டிவிட் போட்டுள்ளாரா? என்று நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.