ஏமாற்றிய அஜித் ரசிகர்! ஏழை பெண்ணிடம் பணமோசடி
அஜித் குமார்
தமிழ் நாட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுக்கும் மக்களிடத்தில் நல்ல வரவேற்புண்டு.
தற்போது இவர் நடித்த துணிவு திரைப்படம் 2023 -ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தில் வெளியான "காசே தான் கடவுளடா" என்ற பாட்டு இணையத்தில் வைரலானது.

பண மோசடி
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ராஜேஸ்வரி - ஐயப்பன் தம்பதியினர். இதில் ஐயப்பன் என்பவர் தீவிரமான அஜித் ரசிகர், இதனை பயன்படுத்திக்கொண்டு அதே மாவட்டத்தை சேர்ந்த சிவா என்பவர் ஐயப்பனிடம், 'உங்களுக்கு அஜித் வீடு கட்டித்தருவார் நான் ஒரு அஜித் ரசிகர் மன்ற நிர்வாகி' என கூறியுள்ளார்.
மேலும், "வீடு கட்டுவதற்கு தேவையான பணம் வங்கிக்கணக்கில் வந்துவிடும். ஆனால் நீங்கள் முன்தொகையாக ரூ 1 லட்சம் செலுத்த வேண்டும்" என ஆசை வார்த்தைகள் கூறி அவர்களிடம் இருந்து 1 லட்சத்தை வாங்கியுள்ளார் சிவா.
ஐயப்பன் பணத்தை செலுத்திய பிறகு சிவாவிடம் இருந்து எந்த தகவலும் வராத நிலையில், தன்னை ஏமாற்றியதை உணர்ந்த ராஜேஸ்வரி - ஐயப்பன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற புகார் அளித்துள்ளனர்.
எந்த சர்ச்சைகளிலும் சிக்காதிருந்த அஜித் தற்போது அஜித்தின் ரசிகர் மன்ற நிர்வாகி எனக்கூறி பண மோசடியில் ஈடுபட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
