பாக்யராஜ் மகன் சாந்தனு உண்மையில் இப்படிப்பட்டவரா.. நடிகரின் அம்மா போட்டுடைத்த உண்மை
சாந்தனு
நடிகர் சாந்தனு பாக்யராஜின் மகன் என்கிற அடையாளத்தோடு சினிமாவில் ஹீரோவாக வந்தவர். சக்கரகட்டி, சித்து +2 உள்ளிட்ட பல படங்களில் அவர் ஹீரோவாகி நடித்து இருந்தாலும் பெரிய அளவில் ஹீரோவாக ஜெயிக்கவில்லை.
தற்போது குணச்சித்திர வேடங்களில் தான் நடித்து வருகிறார் அவர். கடைசியாக அவர் மாஸ்டர் படத்தில் விஜய் உடன் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
அம்மா சொன்ன உண்மை
சாந்தனுவின் அம்மா பூர்ணிமா பாக்யராஜ் தற்போது அளித்திருக்கும் பேட்டி ஒன்றில் அவரை பற்றிய உண்மைகளை கூறி இருக்கிறார்.
"சாந்தனு ஒரு சோம்பேறி, காலையில் எழுப்புவது அவ்ளோ கஷ்டம். கிரிக்கெட் விளையாட போக வேண்டும் அல்லது ஷூட்டிங் இருக்கிறது என்றால் மட்டும் காலையில் எழுவான். மற்றபடி ரொம்ப கஷ்டம்."
"பிடித்த உணவு என்றால் அதிகம் லிமிட் இல்லாமல் சாப்பிடுவான். ஆனால் மனைவி கீர்த்தி முறைத்து பார்த்தால் அவன் டயட் இருக்க ஆரம்பிப்பான்" என பூர்ணிமா கூறி இருக்கிறார். இந்த விஷயத்தை பேட்டியில் சொன்னதால் என்னை திட்ட போகிறான் எனவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.