பூர்ணிமாவுக்கு இந்த நிலையா!! பிக்பாஸ் 7 Final-க்கு ஐஸு வராமல் இருக்க இதான் காரணம்..

Kamal Haasan Bigg Boss Vijay Television Poornima Ravi
By Jai Feb 17, 2024 08:00 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்கள் தங்கள் குடும்பத்துடனும் நேரத்தை செலவிட்டும் பேட்டிகளை கொடுத்து வருகிறார்கள். நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது முதல் எந்த ஒரு பேட்டிகளிலும் கலந்து கொள்ளாத ஐஸு, சமீப நாட்களாக பிக்பாஸ் அனுபவங்களை பேட்டிக்கொடுத்து பகிர்ந்து வருகிறார்.

பூர்ணிமாவுக்கு இந்த நிலையா!! பிக்பாஸ் 7 Final-க்கு ஐஸு வராமல் இருக்க இதான் காரணம்.. | Poornima Treatment Undergoing Therapy Aishu Bb7

சமீபத்தில் கொடுத்த பேட்டியில் பிக்பாஸ் Finale-க்கு ஏன் வரவில்லை என்ற காரணத்தை கூறியிருக்கிறார். கேள்வி கேட்டதும் என்ன சொல்றது என்று முழித்த ஐஸு, அதன்பின் காரணம் என்ன என்று தெரிவித்துள்ளார். உடல் அளவிலும் மனதளவில் சரியில்லாமல் இருந்தேன். அதற்கு தொகுப்பாளர் ஜோ மைக்கேல், எனக்கு தெரிந்து பல போட்டியாளர்கள் இன்று வரை மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பூர்ணிமாவுக்கு இந்த நிலையா!! பிக்பாஸ் 7 Final-க்கு ஐஸு வராமல் இருக்க இதான் காரணம்.. | Poornima Treatment Undergoing Therapy Aishu Bb7

பூர்ணிமா தான் அதை செய்து வருகிறார். இதை எங்களால் நம்ப முடியவில்லை, நாங்களும் அதிலிருந்து மீண்டு இன்னும் வரவில்லை என்று ஐஸுவும் அவரது அம்மா, அப்பாவும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியில் வந்ததும் மனதளவில் கஷ்டப்பட்டோம், அப்போது ஆறுதலாக இருந்தவர்கள் தாத்தாவும் பாட்டியும் தான். நான் அழுது கொண்டிருந்த சமயத்தில் ஜாலியாக ஆறுதலாக பேசினார். மன்னிப்பு கடிதத்தில் கூட இதை குறிப்பிட்டிருப்பேன் என்று ஐஸு தெரிவித்தார். மனதளவில் மீண்டு வர கொஞ்சம் நேரம் தேவைப்பட்டதால் தான் பிக்பாஸ் Finale வரமுடியவில்லை என்று ஐஸு குறிப்பிட்டிருக்கிறார்.