கமலை டார்ச்சர் செய்த பிரபல நடிகையின் தாயார்? வேண்டவே வேண்டாம் என ஒதுக்கிய நாயகன்... REWIND

marriage love sridevi kamal haasan shruthi haasan akshara haasan sarika vani ganapathy
By Kathick Dec 10, 2021 10:00 AM GMT
Report

கமல் ஹாசன் தற்போது நடித்து வரும் படம் விக்ரம். இதனை தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் கமல் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீ தேவியும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஜோடிகளில் ஒருவர்கள். நடிகர் கமல் ஹாசனும், நடிகை ஸ்ரீதேவியும் இணைந்து மூன்றாம் பிறை, 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு, என பல படங்களில் நடித்துள்ளனர்.

அப்போது, இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வந்ததாகவும், திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. பின், ஸ்ரீதேவியின் அம்மாவே கமலிடம் " என் மகளை திருமணம் செய்து கொள்ளுங்கள் " என்று கேட்டிருக்கிறார். ஆனால், கமலோ " ஸ்ரீதேவியும், நானும் ஜோடியாக பல படங்களில் நடித்திருந்தாலும், அவர் என்னை சார் என்றே அழைத்து வருகிறார். நானும் ஸ்ரீ தேவியை என் தங்கையாக தான் பார்க்கிறேன் " என்று கூறி விட்டாராம்.

நடிகர் கமல் ஹாசன் முதல் மனைவி வாணி கணபதியை திருமணம் செய்து, பின் விவாகரத்தும் ஆனது. அதனை தொடர்ந்து சரிகாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட கமல் ஸ்ருதி மற்றும் அக்ஷராவிற்கு தந்தையானார் என்பது குறிப்பிடத்தக்கது.