ஐஸ்வர்யா ராஜேஷ் எல்லாம் விஜயகாந்த் கால் தூசி...கோபத்தில் கொந்தளித்த பிரபல நடிகர்
பிரபல நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமானார். இவருடைய மறைவு மக்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
நடிகர் நடிகைகளுக்கு பல உதவிகள் விஜயகாந்த் செய்து இருந்தும் பலரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தவில்லை.
விஜயகாந்த்துக்கு நெருக்கமாக இருந்தவருமான மீசை ராஜேந்திரன் இது தொடர்பாக ஒரு பேட்டியில் கொந்தளித்து பேசியிருக்கிறார்.
அதில் அவர் கூறுகையில், சூர்யா, விஷால் நினைத்திருந்தால் ஒரு விமானத்தை பிடித்து அடுத்த நாளே வந்திருக்கலாம். ஆனால் அவர்கள் எல்லாம் வரவில்லை.
விஜய்காந்த்திற்காக வரவில்லை, கலைஞர் 100 விழாவுக்காக தான் வந்தார்கள். விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தவில்லை என்றால் மக்கள் திட்டுவார்கள் என்பதால் நினைவிடத்துக்கு வந்துவிட்டு கலைஞர் 100 விழாவுக்கு போனார்கள்.
ஐஸ்வர்யா ராஜேஷ் எல்லாம் விஜயகாந்த் கால் தூசிக்கு சமம். அவரை பற்றி பேச ஐஸ்வர்யா ராஜேஷுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று மீசை ராஜேந்திரன் கோபத்தில் பேசி இருக்கிறார்.