சிவகார்த்திகேயன், தனுஷ் இரண்டு பேருக்கும் சண்டையா? பிரபல நடிகர் கூறிய தகவல்
சிவகார்த்திகேயன் இன்று விஜய்க்கு நிகராக வளர்ந்து வரும் நடிகர். இவர் நடிப்பில் வெளியான அமரன் படம் ரூ 350 கோடிகள் வசூல் செய்து பிரமாண்ட வெற்றியை பெற்றது.
இந்நிலையில் அமரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடிக்கிறார். இவரை போலவே உச்சத்தில் இருக்கும் நடிகர் தனுஷ். இவர் தான் சிவகார்த்திகேயன் ஆரம்பகாலத்தில் சினிமாவிற்கு வந்த போது ஒரு குரு போல் செயல்பட்டார்.
ஆனால், இவர்கள் இருவருக்குமிடையே சண்டை என அவ்வபோது இணையத்தில் செய்திகள் வந்துக்கொண்டே இருக்கும், இதுக்குறித்து நடிகர் ஜீவா ரவி, சிவகார்த்திகேயன்-யை சினிமாவில் கொண்டு வந்தது தனுஷ், அவரின் வளர்ச்சி பார்த்து தனுஷ் சந்தோஷம் தான் அடைவார்.
அதே நேரத்தில் தனுஷ் சிவகார்த்திகேயன் நடிக்கும் செட்-ற்கு வந்த போது நல்ல நடிக்கிறீங்க சிவா என பாராட்ட தான் செய்தார், அவர்களுக்குள் எந்த சண்டையும் இல்லை என ஜீவா ரவி கூறியுள்ளார்.