திருமணமான நடிகையுடன் காதலில் இருந்த கமல்.. இரண்டாவது மனைவி சரிகாவை பிரிய காரணமே இதுவா
இருக்குமோ உலகநாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல் ஹாசன். இவருடைய நடிப்பில் தற்போது விக்ரம் படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கவுள்ள படத்தில் கமல் நடிக்கவிருந்தாக தகவல் தெரிவிக்கின்றனர். மேலும் நடிகர் கமல் ஹாசன் தற்போது பிக் பாஸ் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
நடிகர் கமல் ஹாசன் முதல் மனைவி வாணி கணபதியை திருமணம் செய்து, பின் விவாகரத்தும் ஆனது. அதனை தொடர்ந்து சரிகாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட கமல் ஸ்ருதி மற்றும் அக்ஷராவிற்கு தந்தையானார். ஆனால் இவருக்கு இரண்டாவது திருமணமும் சில வருடங்கள் மட்டுமே நீடித்தது.
அதற்கு முக்கிய காரணம் நடிகை கௌதமி என்று திரைவட்டாரங்கள் கூறுகின்றனர். அதாவது, நடிகை கௌதமியுடன் நடிகர் கமலுக்கு ஏற்பட்ட காதல் தான், கமல் ஹாசனுடைய இரண்டாவது திருமணத்தின் பிருகு காரணம் என்று தெரிவிக்கின்றனர். இரண்டாவது மனைவியை பிரிந்த கமல் ஹாசன், நடிகை கௌதமியுடன் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தார்.
நடிகை கௌதமிக்கு ஏற்கனவே திருமணமாகி, ஒரு மகள் இருக்கிறார். ஆனால், அப்போது தனது கணவரை விவாகரத்து செய்து விட்டு தான், கமல் ஹாசனுக்கு இணைத்தார் கௌதமி என்று பலரும் திரை வட்டாரத்தில் கிசுகிசுகின்றனர்.