அந்த மாறி செயல்களை செய்து என்னை கோவப்படுத்தினார்.. நடிகர் பிரசாந்த் பற்றி பிரபல நடிகை பேச்சு
நடிகை சங்கவி
90 -களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை சங்கவி. இவர் 1993 -ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான 'அமராவதி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து கமல், விஜயகாந்த், விஜய், சரத்குமார் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து இருக்கிறார் சங்கவி. மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.

நடிகர் பிரசாந்த்
பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து டாப் ஸ்டாராக திகழ்ந்தவர் நடிகர் பிரசாந்த். இவருடன் ஜோடியாக மன்னவா படத்தில் நடித்திருந்தார் சங்கவி. இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சங்கவி, பிரசாந்துடன் படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில், " நானும் பிரசாந்தும் ஷூட்டிங் ஸ்பாட்டில் சண்டை போட்டு கொண்டு இருப்போம். அவர் அதிகமா குறும்பு தனம் செய்வார். பலூன் எடுத்து வந்து என் காதில் வைத்து ஓடைப்பார். இது போன்ற செயல்கள் செய்து என்னை கோவப்படுத்துவார்" எனக் கூறினார்.
