கேவலமாக நடந்து கொண்ட பிரபல நடிகை.. மனைவியின் தாலியை அடமானம் வைத்த பிரபல தயாரிப்பாளர்..
Tamil Producers
By Dhiviyarajan
80, 90- களில் பிரபல நடிகர், தயாரிப்பாளர் வலம் வந்தவர் தான் நடிகர் தியாகராஜன். இவர் நடிப்பில் 1983 -ம் ஆண்டு வெளியான "மலையூர் மம்பட்டியான்" இவருக்கு கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது.
இந்த படத்தில் ஹீரோயினாக முன்னணி நடிகை சரிதா நடித்திருப்பார். அப்போது இப்படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நடந்து வந்துள்ளது.

தாலி அடமானம்
அந்த நேரத்தில் சரிதா அவருடைய சம்பளத்தை கொடுத்தால் தான் நடிக்க வருவேன் என்று கூறியுள்ளார். இதனால் மூன்று நாள் ஷூட்டிங் நின்றுவிட்டதாம்.
இந்த படத்தின் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி சிறிய பட்ஜெட்டில் தயாரித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீர் என்று சரிதா சம்பளத்தை கேட்டதால் வேறு வழியில்லாமல் மனைவியின் தாலியை அடமானம் வைத்து சரிதாவிற்கு சம்பளம் கொடுத்தாராம்.
