சிவகார்த்திகேயனை ஒதுக்கி அசிங்கப்படுத்திய டிவி சேனல்கள்.. சரியான நேரத்தில் கொடுத்த பதிலடி..

Sivakarthikeyan Oviya
By Edward Sep 20, 2022 04:45 AM GMT
Report

10 ஆண்டு சினிமா வாழ்க்கை

மெரினா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

தொலைக்காட்சி தொகுப்பாளர், ஸ்டாண்டப் காமெடியன் என்று இருந்து அவரது சின்னத்திரை வாழ்க்கை குறுகிய காலக்கட்டத்தில் வெள்ளித்திரையில் முன்னணி இடத்தையும் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகராகவும் திகழ்ந்து வருகிறார்.

சிவகார்த்திகேயனை ஒதுக்கி  அசிங்கப்படுத்திய டிவி சேனல்கள்.. சரியான நேரத்தில் கொடுத்த பதிலடி.. | Popular Channel That Ignored Sivakarthikeyan

ஒதுக்கிய டிவி சேனல்கள்

இப்படியிருக்கையில் 2012ல் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மெரினா படம் வெளியானது. அப்போது அந்த படத்தின் பிரமோஷனுக்காக பல தொலைக்காட்சி சேனல்கள் நிகழ்ச்சியை நடத்த மறுத்துள்ளனர்.

அப்போது ஒதுக்கிய சேனல்கள் தற்போது சிவகார்த்திகேயனை பேட்டி எடுக்கவே வரிசையில் காத்து வருகிறார்கள். முன்னணி நட்சத்திரங்களின் நிகழ்ச்சிக்கு கூட சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயனை அழைக்கிறார்கள்.

வெள்ளித்திரையில் அறிமுகமாகி சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேல் தனக்கான அடையாளம் கிடைக்க சிவகார்த்திகேயன் படாத கஷ்டத்தை சந்தித்து தன்னை புறக்கணித்து அவமானப்படுத்தியவர்களுக்கு தன் வெற்றியால் பதிலடி கொடுத்து கெத்து காட்டி வருகிறார்.


Gallery