கடைசி வரை கண்டுகொள்ளாத வைகைபுயல்!! வீட்டிலேயே சுருண்டு விழுந்த காமெடி நடிகர் போண்டா மணி..
தமிழ் சினிமாவின் வைகைப்புயல் என்ற பெயரோடு ஜொலித்து வரும் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல கலைஞர்கள் நடித்து வந்துள்ளனர்.
ஆரம்பத்தில் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து நடிக்க வைத்தாலும் வடிவேலு தங்களுக்கு துரோகம் தான் செய்து வந்தார் என்று அவருடன் நடித்த பல கலைஞர்கள் குற்றச்சாட்டு வைத்து வந்தனர்.
அதில் முக்கியமானவர் நடிகை போண்டா மணி. வடிவேலுவுடன் பல படங்களில் நடித்து வந்தவர் சமீபகாலமாக சிறுநீரகம் இரண்டுமே செயலிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். பலரிடம் உதவி கேட்டதில் ரஜினிகாந்த், தனுஷ், விஜய் சேதிபதி உள்ளிட்ட பலர் உதவி செய்தனர்.
ஆனால் வைகைப்புயல் வடிவேலு மட்டும் அவரை கண்டுக்கொள்ளாமல் தலையை கூட காட்டாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில், சிகிச்சை பெற்று வந்த போண்டா மணி வீட்டில் மயங்கி கீழே விழுந்திருக்கிறார்.
மூச்சு பேச்சு இல்லாத அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அவர் இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் கூறி உறுதி செய்திருக்கிறார்கள்.
தற்போது அவரது மறைவுக்கு பல நட்சத்திரங்கள் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இறுதிச்சடங்கிற்காகவது வடிவேலு வந்து பார்ப்பாரா? என்ற கேள்வியும் தற்போது இழுந்துள்ளது.