அந்த நடிகர் நடிச்சா நான் நடிக்க மாட்டேன்!! வளரும் நடிகரின் வாய்ப்பை கெடுத்த வடிவேலு..
சினிமாவில் நகைச்சுவைக்கான சிகரத்தை பிடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடத்தினை பிடித்துள்ளவர் நடிகர் வடிவேலு. படத்தின் கதைக்கு ஏற்பட்ட தன்னை மாற்றிக்கொண்டு நகைச்சுவை செய்யும் திறமை வடிவேலுவுக்கு உண்டு.
அப்படி மாறுபட்ட கதைகளங்களை சந்தித்து சக நடிகர்களை வளரவிடாமல் தடுப்பர் என்ற பெயரையும் வாங்கியிருக்கிறார் வடிவேலு. தனக்கென்று ஒரு தனிக்குழுவை வைத்திருந்த வடிவேலு தற்போது அவர்கள் வடிவேலுவுக்கு எதிராக பல பேட்டிகளில் திட்டியும் வருகிறார்கள்.
அந்தவகையில் காதல் படத்தின் மூலம் பிரபலமானவர் காதல் சுகுமார். காதல், விருமாண்டி, பாபா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த காதல் சுகுமார் சினிமாவில் தொடர் வாய்ப்பினை இழந்து வந்துள்ளார்.
அப்படி ஒரு பேட்டியொன்றில், வடிவேலு மற்றும் விவேக்கால் வாய்ப்புகள் பலவும் கிடைக்காமல் போனதாக கூறியுள்ளார்.
இங்கிலீஷ்காரன், சச்சின், ஆறு போன்ற படத்தில் தனக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் அவருடன் நடிக்க மாட்டேன் என்று வடிவேலு கூறியதால் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போனதாகவும் சுகுமார் தெரிவித்துள்ளார்.