"விஜய்க்கு வக்கு இல்ல"- காட்டமாக தன் ஆதங்கத்தை காட்டிய தயாரிப்பாளர்

vijay k rajan
By Kathick Nov 22, 2021 02:30 PM GMT
Report

தமிழில் ஒரு சில படங்களை தயாரித்து வழங்கி தயாரிப்பாளராக விளங்குபவர் K.ராஜன். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் விஜய்யை கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார். சூர்யாவின் ஜெய் பீம் படம் குறித்த சர்ச்சை ஒரு புறம் இருக்க அவருக்காக திரையுலகின் முன்னணி கதாநாயகர்கள் யாரும் குரல்கொடுக்க வில்லை என குற்றம் சாட்டியிருக்கிறார் இவர்.

மேலும் நடிகர்கள் விஜயகாந்த் மற்றும் சரத்குமார் தலைமையில் இருந்தபோது நடிகர் சங்கம் ஒழுங்காக செயல்பட்டதாகவும் தற்போது அவர்கள் பொறுப்பில் இருந்திருந்தால் சூர்யாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்திருப்பார்கள் என தெரிவித்திருக்கிறார்.

விஜய் வீட்டில் நடந்த சோதனையின் போது, நான் அவருக்கு ஆதரவாக பேசியிருந்தேன். ஆனால் அதற்காக ஒரு நன்றி தெரிவிப்பதற்கு கூட விஜய்க்கு வக்கு இல்லை என காட்டமாக கூறியிருக்கிறார் ராஜன். இவரின் இந்த பேச்சு தான் விஜய் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது.