விளம்பரம் செய்வதாக கூறி பணத்திற்காக ஏமாற்றுகிறார்களா பிரபல சீரியல் நடிகைகள்? அதுவும் இந்த பொண்ணா!

money comali cook Dharsha Gupta
By Jon Apr 09, 2021 06:37 PM GMT
Report

தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பல நடிகைகள் தங்கள் வாய்ப்பிற்காக இணையதள பக்கம் சென்று புகைப்படங்களை பதிவிடுவார்கள். அப்படி இணையத்தில் அதுவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் செய்தால் அதற்கேற்ப பணம் கிடைக்கும் என்பதற்காக சீரியல் நடிகைகள் தானாக முன் வருகிறார்கள்.

அப்படி குக் வித் கோமாளி புகழ் நடிகை தர்ஷா குப்தா பண மோசடி செய்ததாக ஒருவர் வீடியோவை வெளியிட்டு அசிங்கடுத்தினார். நான் அப்படி செய்யவில்லை என அழுது புலம்பி ஒரு வீடியோவை வெளியிட்டார். ஒரு பொருளை பிரமோட் செய்வதற்காக ஒரு வீடியோவுக்கு, ஒரு போட்டோவுக்கு இவ்வளவு என பேசி சம்பாதித்து வருகின்றனர்.

ராஜா ராணி சீரியல் என்ற ஒரே ஒரு சீரியல் மூலம் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு வரவேற்பைப் பெற்ற ஆலியா மானசா மோசடி செய்வதில் முதல் ஆளாக இருக்கிறாராம். சிறுசிறு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தாலும் சரி, சின்ன சின்ன நிறுவனங்களின் பொருள்களை பிரமோஷன் செய்வதானாலும் சரி, லட்சக் கணக்கில் பில்லு போட்டு வருகிறாராம்.

ஒரு வீடியோவுக்கு ஒரு லட்சம் வரை புரமோஷன் பண்ணுவதற்காக பணம் வாங்குகிறாராம் ஆலியா மானசா. அப்படி ஒரு நிறுவனத்திடமிருந்து பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாகவும் கூறுகிறார்கள். ஏமாற்றுவதிலும் முதல் படியில் இருக்கிறார் என்று ஆலியா மானசா மீது புகார்கள் எழுந்து வருகிறது.