ராதே ஷ்யாம்-ஆல் நடுரோட்டுக்கு வந்த தயாரிப்பாளர்! 200 கோடி பட்ஜெட்டுக்கு ஈடுகட்டிய பிரபாஸ்

prabhas poojahegde radheshyam
By Edward Apr 11, 2022 03:49 AM GMT
Report

சினிமாவை பொருத்தவரையில் பல கோடி பட்ஜெட்டோடு உருவாகும் படங்கள் கதை சரியாக அமையவில்லை என்றால் தோல்வியை சந்தித்து தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும். போட்ட பணமாவது வந்தால் போதும் என்ற நிலைமைக்கும் அந்த தயாரிப்பாளர்கள் சென்று விடுகிறார்கள்.

அப்படி 200 கோடி பட்ஜெட்டோடு பிரம்மாண்ட முறையில் உருவான படம் ராதே ஷ்யாம். நடிகர் பிரபாஸ், பூஜா ஹெக்டே இணைந்து நடித்த இப்படம் பல தியேட்டர்களில் வெளியானாலும் படத்தின் கதைகளம் சரியில்லை என்ற காரணத்தினால் நஷ்டத்தை சந்தித்தது.

போட்ட பணம் கூட வராமல் 142 கோடி மட்டுமே வசூலித்தது. பிரபாஸிற்கு மட்டும் 200 கோடி பட்ஜெட்டில் 100 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டது. இந்நிலையில் மன வருத்தத்தில் இருந்த தயாரிப்பாளரிடம் சென்ற பிரபாஸ் தனக்கு கொடுத்த 100 கோடியில் 50 கோடி சம்பளத்தினை நஷ்டத்தை ஈடுகட்ட ஏதுவாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

ஆனால் தயாரிப்பாளர் அந்த பணத்தை வாங்க மறுத்துவிட்டாராம். பின் என் முகத்திற்காக தான் படத்திற்கு மக்கள் வருகிறார்கள். அதனால் தான் விநியோகஸ்தர்கள் என் படத்தினை வாங்குகிறார்கள்.

இந்த பணம் அவர்களுக்கு உதவும் என்று கூறியுள்ளார் பிரபாஸ். இப்படி எல்லா நடிகர் நடிகைகளுக்கும் இருந்தால் எந்த தயாரிப்பாளரும் நடுத்தெருக்கு வரமாட்டார்களே...