பிரபுதேவா குடும்பத்தில் பிரச்சனையா? அண்ணன் தம்பிக்குள் இடையே சண்டை
பிரபல நடிகரும், நடன கலைஞருமான பிரபு தேவாவை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்திய மைக்கேல் ஜாக்சன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். பிரபு தேவா மட்டுமின்றி அவரது சகோதரர்களும் நடன கலைஞர்கள் தான்.
சமீபத்தில் பிரபு தேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், என் அண்ணனுக்கு தான் வீட்டில் அதிகமான மதிப்பு இருக்கிறது. பொதுவாக யாரிடம் பணம் அதிமாக இருக்கிறதோ அவர்களை தான் சமுதாயம் மதிக்கும்.
அந்த மாதிரி தான் பிரபு தேவா சொல்வது தான் வீட்டில் நடக்கும். அவர் சொல்வதை தான் அம்மா கேட்பார்கள் . ஏன் என்றால் அவர் தான் அதிகமாக சம்பாதிக்கிறார் என்று நாகேந்திர பிரசாத் கூறியுள்ளார்.
இவர் பேசிய வீடியோ பார்த்த ரசிகர்கள், பிரபு தேவா, நாகேந்திர பிரசாத் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருக்குமோ? என்ற கேள்வி ரசிகர்களுடன் எழுந்துள்ளது.