2 ஆம் திருமணத்திற்கு பின் தலைக்காட்டாத மனைவி!! முதன்முதலில் வெளியான பிரபுதேவாவின் இரண்டாம் மனைவி வீடியோ
இந்திய சினிமாவில் மைக்கேல் ஜேக்சன் என்று புகழப்பட்டு வருபவர் பிரபு தேவா. நடன இயக்குனரை தாண்டி இயக்கம், நடிப்பு, தயாரிப்பில் கவனம் செலுத்தி வரும் பிரபுதேவா கடந்த 1995ல் ரமலாத் என்பவரை திருமணம் செய்து இரு மகன்களை பெற்றெடுத்தார்.
அதன்பின் 15 ஆண்டுகளுக்கு பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகர்த்து பெற்று பிரிந்தனர். விவாகரத்துக்கு முழுக்க காரணமாக அமைந்தது நடிகை நயன் தாரா தான் என்று ரமலாத் புகாரளித்தார்.
பிரபு தேவா, நயன் தாராவை தீவிரமாக காதலித்து திருமணம் வரை சென்று பின் முதல் மனைவி கொடுத்த பிரச்சனையால் பிரிந்துவிட்டார்.
அதன்பின் பல ஆண்டுகள் கழித்து ஹிமானி சிங் என்பவரை 2020ல் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் பிரபுதேவா.
திருமணத்திற்கு பின் தலைக்காட்டாமல் இருந்த பிரபுதேவாவின் மனைவி தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வீடியோ கால் மூலம் பேசியுள்ளார்.
கன்னட நிகழ்ச்சியில் ஹிமானி சிங் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
You May Like This Video