வடிவேலு வாயில் விரலைவிட்டு ஆட்டிய பிரபுதேவா!! கடுப்பாகிய வைகைப்புயல்..
பிரபுதேவா நடன நிகழ்ச்சி
நடிகர், நடன இயக்குநர், இயக்குநர் என்று பல பரிமானங்களில் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகர் பிரபுதேவா. தற்போது இந்தி, தமிழ், தெலுங்கு என நடித்து வரும் பிரபுதேவா, முதல்முறையாக கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி பிரம்மாண்ட நடன நிகழ்ச்சியை நடத்தினார்.
தனுஷ், எஸ் ஜே சூர்யா, வடிவேலு, பாக்யராஜ், பூர்ணிமா, மீனா, அதிதி ஷங்கர், ரம்பா, சாக்ஷி அகர்வால், சாண்டி மாஸ்டர், தனுஷின் மகன் என ஏகப்பட்ட பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பிரபுதேவாவும் வடிவேலுவும் காதலன் படத்தில் இருந்தே இணைந்து பல படங்களில் நடித்து வந்தனர்.
பேட்ட ராப்
அதே நட்புடன் நடன நிகழ்ச்சியில் வடிவேலுவிடம் பிரபுதேவா செய்த லூட்டி தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பேட்ட ராப் பாடலுக்கு மேடையில் இருந்து இறங்கி சென்ற பிரபுதேவா, வடிவேலுவின் தலையை பிடித்து ஆட்டியும் வாயில் விரல் விட்டு ஆட்டியும் வைப் செய்தார்.
இதனை பார்த்து தனுஷ் உள்ளிட்ட பலரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
Vibe Panraaru Guys @dhanushkraja 🥹♥️ pic.twitter.com/0kFczGHfGy
— ஜெய் DFC 😎 (@_Jai_DFC) February 24, 2025