எல்லாம் முடிஞ்சுருச்சு, கெட்ட பயன் சார் நானு, விரக்தியில் கொந்தளித்த ப்ரதீப் ஆண்டனி
Bigg Boss
Pradeep Anthony
By Tony
ப்ரதீப் ஆண்டனி இவர் பேச்சு தான் இணையத்தில் எங்கு திரும்பினாலும், இதற்கு முக்கிய காரணம் கமல் கொடுத்த ரெட் கார்ட் தான்.
ஆம், கமல் பிக்பாஸ் வரலாற்றில் முதன் முறையாக ரெட் கார்ட் கொடுத்து ஒருவரை வெளியேற்றியுள்ளார்.
இவை மிகப்பெரும் பேசுப்பொருள் ஆனது, இதை தொடர்ந்து ப்ரதீப்பை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அழைத்து வர வேண்டும் என ரசிகர்கள் போராட்டம் மட்டும் தான் நடத்தவில்லை, மற்றப்படி சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் செய்து தங்கள் ஆதரவை தந்தனர்.
இதை தொடர்ந்து ப்ரதீப் இந்த வாரம் வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கமல் ரெட் கார்ட் கொடுத்தது, கொடுத்தது தான் இனி மாற்றமில்லை என சொல்ல, ப்ரதீப்பும் அதை தன் டுவிட்டர் பக்கத்தில் ஆதங்கமாக தெரிவித்துள்ளார், இதோ..
