எப்போதும் அனாதையாக இருக்கும் என் சாபத்தை ஏற்றுக்கொண்டேன்..விவாகரத்தை அறிவித்த பிரதீப் ஆண்டனி.
பிரதீப் ஆண்டனி
நடிகர் கவினின் நண்பரும் பிக்பாஸ் பிரபலமுமான பிரதீப் ஆண்டனிக்கு சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. பிக்பாஸில் இருக்கும் போது தன்னுடைய காதலியை அறிமுகப்படுத்தி அடுத்த ஆண்டே திருமணத்தை முடித்தார்.

சில மாதங்களுக்கு முன் இருவருக்கும் ஒரு குழந்தை பிறந்தது. இந்நிலையில் பிரதீப் ஆண்டனி தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக செய்திகள் பரவியது.
விவாகரத்து
இந்நிலையில் பிரதீப் ஆண்டனி வெளியிட்ட பதிவில், என் குழந்தையை நண்பர்களிடம் விற்றுவிடலாம் என்று நான் நகைச்சுவையாக சொல்லியிருக்கிறேன். ஆனால், குழந்தை இந்த உலகிற்கு வந்ததும், அதோடு இணைந்துவிட்டேன். எனக்கு எப்போதுமே ஒரு குடும்பம் வேண்டும் என்ற ஆசை இருந்தது.

ஆனால் நான் இன்று குழந்தையை இழந்து தோற்றுவிட்டேன். தவறான நபரை திருமணம் செய்துவிட்டேன். திருமண வாழ்க்கையில் இருந்து விலகிச் செல்லப்போகிறேன். குழந்தை அம்மாவுடன் இருப்பதே நல்லது, அனாதையாகவே வாழ வேண்டும் என்ற என் விதியை ஏற்றுக்கொண்டுவிட்டேன் என்று நீண்ட பதிவினை பகிர்ந்துள்ளார்.