பிரதீப்பை வீட்டுக்கு வர சொன்ன சூப்பர்ஸ்டார்.. கோமாளி படத்தில் கலாய்த்ததை மறந்துவிட்டாரோ

Rajinikanth
By Parthiban.A Nov 12, 2022 07:42 PM GMT
Report

கோமாளி படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியை கலாய்த்து ஒரு சீன இருக்கும். அது ட்ரைலரில் வெளிவந்தபோதே ரஜினி ரசிகர்கள் எதிர்த்ததால் அந்த காட்சியை நீக்கிவிட்டனர்.


அந்த படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் தற்போது லவ் டுடே என்ற படத்தை இயக்கி ஹீரோவாக நடித்து இருக்கிறார். அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது.

இந்நிலையில் ரஜினி பிரதீப் ரங்கநாதனை இன்று வீட்டுக்கு அழைத்து பேசி இருக்கிறார். அவருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தி இருக்கிறார்.

ஒரு சூரியனுக்கு அருகில் இருந்தது போல இருந்தது என ரஜினியை சந்தித்தது பற்றி பிரதீப் ட்விட்டரில் பேசி இருக்கிறார்.

தன்னை கலாய்த்தவர் என்பதை நினைவில் வைக்காமல், ஹிட் கொடுத்ததற்காக அவரை அழைத்து பாராட்டிய ரஜினிக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.