Dude பட நடிகையுடன் காதலா? பிரதீப் ரங்கநாதனால் குழம்பிய ரசிகர்கள்..
Dude
இயக்குநர் மற்றும் நடிகரான பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடிப்பில் இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் சாய் அபியங்கர் இசையில் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக பிரதீப் ரங்கராதன் ஹைதராபாத்திற்கு சென்றுள்ளார். அந்நிகழ்ச்சிக்கு சென்று பேசிக்கொண்டிருக்கும் போது, ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து, மமிதா பைஜு ஏன் வரவில்லை? அவர் எங்கே? என்று கேட்டு கேள்வியை எழுப்பினர்.
பிரதீப் ரங்கநாதன்
அப்போது பிரதீப் காதில் விழ, உடனே மமிதா பைஜு என் இதயத்தில் இருக்கிறார் என்று தனது நெஞ்சை தொட்டப்படி கூறியிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய பிரதீப், இது சும்மா விளையாட்டுக்காக சொன்னேன், மமிதா பைஜு, சூர்யா சாரின் படத்தின் ஷூட்டிங்கில் இருக்கிறார். 11 ஆம் தேதி பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார் என்றும் அதுவும் ஹைதராபாத்திற்கு கட்டாயம் அவர் வருவார் என்றும் கூறியுள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் கூறிய வீடியோ இணையத்தில் தற்போது பகிரப்பட்டு ஒருவேளை அப்படி இருக்குமோ என்ற கண்ணோட்டத்தில் கருத்துக்களை நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.