பிரதீப் ரங்கநாதனை வைத்து அஜித்தை பழிவாங்குகிறாரா விக்னேஷ் சிவன்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர்..

Ajith Kumar Vignesh Shivan Gossip Today Pradeep Ranganathan
By Edward Feb 24, 2023 11:21 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏகே 62 படத்திற்காக காத்துக்கொண்டிருந்தார்.

ஏற்கனவே அஜித்தின் 62வது படத்தினை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த ஆண்டு அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைக்கா அறிவித்தது.

ஆனால் சிலவற்றை கதையில் மாற்றுமாறு அஜித் மற்றும் லைக்கா நிறுவனம் கூறியிருந்ததாம். ஆனால் சமீபத்தில் அதே கதையை அப்படியே எதுவும் மாற்றாமல் அப்படியே சென்று கூறியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

8 மாதமாகியும் கதையில் மாற்றத்தை கொண்டு வராததால் கடுப்பாகிய அஜித் நயன் தாரா எவ்வளவு கூறியும் வேண்டவே வேண்டாம் என்று விக்னேஷ் சிவனிடம் இருந்த வாய்ப்பை தூக்கி எறிந்தார்.

அதன்பின் லைக்கா நிறுவனத்துடன் சேர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் பூஜையை ஆரம்பித்துள்ளார்கள் அஜித் மற்றும் லைக்கா நிறுவனம். இதனால் கடுப்பாகிய விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை வைத்து அந்த கதையை எடுக்கவுள்ளார் என்றும் அதில் விஜய் சேதுபதியும் நடிக்கவிருக்கலாம் என்றும் தகவல் வெளியானது.

ஆனால் அஜித்திற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளது என்பது பொய்யான தகவல் என்று பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் கூறியுள்ளார். அதேபோல் வணங்கான் படத்தில் இருந்து சூர்யா வெளியேறியதும் அவர் கதாபாத்திரத்தில் நடிகர் அருண் விஜய்யை நடிக்க வைத்து வருகிறார் இயக்குனர் பாலா.

சூர்யா இல்லாத காட்சிகளை அப்படியே வைத்துக்கொண்டு அருண் விஜய்யை வைத்து கன்னியாக்குமரியில் ஷூட்டிங்கை தன்னுடைய தயாரிப்பில் எடுத்து வருகிறார் இயக்குனர் பாலா.

GalleryGalleryGallery