46 வயதில் இப்படியா.. அம்மா நடிகையின் வீடியோ பார்த்து மிரண்ட நெட்டிசன்கள்
Indian Actress
By Parthiban.A
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அம்மா ரோல்களில் அதிகம் நடித்து வருபவர் பிரகதி. இவர் பல டாப் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து இருக்கிறார். காமெடி, செண்டிமெண்ட் என பல விதமாக நடித்து ரசிகர்களை கவர கூடியவர் அவர்.
பிட்னெஸ் மீது அதிகம் ஆர்வம் கொண்ட பிரகதி எப்போதும் அவரது ஒர்கவுட் மற்றும் டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது அவர் dumbbellகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி அதன் மீது நின்று ஸ்டண்ட் செய்து இருக்கிறார்.
மேலும் அவர் 150 கிலோ வெயிட்டை ஒற்றை கையால் இழுக்கும் வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்து எல்லோரும் மிரண்டிருக்கிறார்கள்.
46 வயதில் வீடியோ எடுக்கவேண்டும் என்பதற்காக இப்படி ரிஸ்க் எடுக்காதீர்கள் என நெட்டிசன்கள் அவருக்கு அட்வைஸ் கூறி வருகின்றனர்.