கெட்டக்கனவாக இருக்கக் கூடாதா? லீக் வீடியோவிற்கு பதிலடி கொடுத்த நடிகை பிரக்யா நாக்ரா...

Viral Video Gossip Today Tamil Actress Actress
By Edward Dec 07, 2024 03:00 PM GMT
Report

பிரக்யா நாக்ரா

டிக் டாக் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பிரக்யா நாக்ரா. சோசியல் மீடியாக்களில் மிகவும் பிரபலமான இவருக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் பிஸியாக நடித்து வருகிறார்.

கெட்டக்கனவாக இருக்கக் கூடாதா? லீக் வீடியோவிற்கு பதிலடி கொடுத்த நடிகை பிரக்யா நாக்ரா... | Pragya Nagra Slams Evil Minds Who Misuse Videos

நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான வரலாறு முக்கியம் என்ற படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் N4, நதிகளில் சுந்தரி யமுனா, லக்கம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் பிரக்யா நாக்ரா, அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

லீக் வீடியோவிற்கு பதிலடி

சமீபத்தில் திடீரென எக்ஸ் தளத்தில் நடிகை பிரக்யாவின் லீக் வீடியோ கசிந்துள்ளதாக கூறி நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வந்தனர். கிட்டத்தட்ட இரு நாட்களாக பிரக்யாவின் அந்த ஹாஷ்டேக் ட்ரெண்ட்டிங்கில் இருந்து வரும் நிலையில், இதுகுறித்து விளக்கம் கொடுத்திருக்கிறார் நடிகை பிரக்யா. எக்ஸ் தளத்தில், இது ஒரு கெட்டக்கனவாக இருக்கக்கூடாதா? என்று நினைக்கிறேன். அந்த வீடியோவில் இருப்பது நான் கிடையாது.

கெட்டக்கனவாக இருக்கக் கூடாதா? லீக் வீடியோவிற்கு பதிலடி கொடுத்த நடிகை பிரக்யா நாக்ரா... | Pragya Nagra Slams Evil Minds Who Misuse Videos

இது மோசமான ஆபாச AI எடிட்தான். டெக்னாலஜி பெண்களின் வாழ்க்கையை இப்படி சீரழிக்கக்கூடாது. வக்கிரம் பிடித்து இப்படி டீப் ஃபேக் வீடியோக்களை ரெடு செய்து வெளியிடும் கயவர்கள் மற்றும் அதை ட்ரெண்ட் செய்யும் கெட்ட புத்திக்கொண்ட நபர்களால்தான் பல பெண்கள் கஷ்டப்படுகிறார்கள்.

என்னைப்போல் மற்ற பெண்கள் யாரும் இதுபோன்ற AI எடிட் ஆபாச வீடியோக்களால் பாதிக்கக்கூடாத அளவிற்கு சைபர் போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன். எனக்கு இந்த இக்கட்டான சூழலில் கூட என்னை நம்பி அது நானாக இருக்காது என்றும் ஸ்டே ஸ்ட்ராங் எனக்கூறும் ரசிகர்களுக்கு நன்றி டெஹ்ரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டிருக்கிறார் நடிகை பிரக்யா நாக்ரா.

Gallery