பிரகாஷ் ராஜின் முதல் மனைவி யார் தெரியுமா? டிஸ்கோ சாந்தியின் அந்த உறவாம்!
தமிழ் சினிமாவின் வில்லன் நடிகராக பல ஆண்டுகளாக கலைகட்டி நடித்து கொண்டிருப்பவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இந்த கதாபாத்திரத்தில் இவர் வில்லனாக நடித்தால் அருமையாக படம் ஓடும் என்று சொல்லும் அளவிற்கு நடிப்பில் குறைவைக்காத நடிகராக திகழ்ந்து வருகிறார்.
முன்னணி நடிகர்கள் அனைவருடன் நடித்து கொண்டிருக்கும் பிரகாஷ் ராஜிற்கு 2010 ல் போனி வர்மா என்பவருடன் இரண்டாம் திருமணம் நடந்து ஒரு மகனும் இருக்கிறார். ஆனால் முதல் மனைவி யார் என்று யாருக்கும் தெரியாமல் இருந்தது.
அது வேறு யாருமில்லை கருப்பு பெயிண்ட் முகத்தில் அடித்து கொண்டு நடிகர் கவுண்டமனிக்கு தங்கையாக நடித்த லலிதா குமாரி தானாம். எஸ்.பி முத்துராமன் படத்தில் அப்படியாக கருப்பு பெயிண்ட் அடித்து நடிக்க அழுது புலம்பினேன். நடிக்க மாட்டேன் என்று கூறியபோதும் இயக்குநர் என்னிடம் ஆறுதலாக பேசி சம்பதம் வாங்கி நடித்தேன் என்று சமீபத்தில் பேட்டியொன்றில் கூறினார்.
அப்படத்தின் மூலம் பல படங்கள் கிடைத்து 30 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் லலிதா குமாரி. 1994ல் நடிகர் பிரகாஷ் ராஜ் முன்னணி நடிகராக ஹீரோவாக நடித்திருந்த காலகட்டத்தில் அவரை திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளுக்கு தாயானார்.
இதையடுத்து சில கருத்து வேறுபாடுகளால் 2009ல் விவாகரத்து பெற்று சினிமாவை விட்டும் விலகி குழந்தைகளை பார்த்ஹ்டு கொண்டார். நடிகை லலிதா குமாரி பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் சகோதரியும் என்பது குறிப்பிடத்தக்கது.