10 வருட திருமண வாழ்க்கை! சினேகா பிரசன்னா இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு
தமிழ் சினிமாவின் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாகவும் புன்னகை அரசியாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை சினேகா என்னவளே படத்தின் மூலம் கதாநாயகியாக ஆரம்பித்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்த சினேகா, நடிகர் பிரசன்னாவை காதலித்து 2012ல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு குழந்தைகளுக்கு தாயான சினேகா தற்போது படங்களில் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில் திருமணமாகி 10 வருடத்தை கணவர் பிரசன்னாவுடன் கொண்டாடியுள்ளார் சினேகா. இதையொட்டி சினேகாவுடன் கடந்த 10 வருட வாழ்க்கை எப்படி என்பது பற்றி ஒரு உருக்கமான பதிவினை இணையத்தில் பகிர்ந்துள்ளார் பிரசன்னா.
10 வருடம் எளிதாக கடந்துவிடவில்லை. பல சண்டைகள் இருவருக்கும் ஏற்பட்டு கருத்து வேறுபாடுகளும் வந்துள்ளது. சினேகாவிற்கு கொடுத்த வாக்குறுதிகளை நான் மீறியுள்ளேன். இதனால் உன் இதயம் உடைந்திருக்கிறது என்பது தெரியும்.
உன்மீது இருக்கும் அன்பு எப்போது குறைந்ததில்லை. உன்னுடைய அன்பால் என்னை வென்று வருகிறார். என் இதயத்தில் நிரந்தரமான உடம் எப்போது உனக்கு இருக்கிறது ஐ லவ் யூ என்று பதிவிட்டுள்ளார்.