பிரசாந்த் மட்டும் சினிமாவில் வர வில்லை என்றால்.. இந்த வேலை தான் செய்திருப்பார்
தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் என்று திகழ்பவர் நடிகர் பிரசாந்த். இவர் வைகாசி பொறந்தாச்சு என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
விஜய், அஜித் போன்ற நடிகர்கள் தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் காலத்தில் இவர்களுக்கு போட்டியாக நடிகர் பிரசாந்தும் தனக்கென ஒரு பாதையை அமைத்து, பல ஹிட் படங்களை கொடுத்தார்.
இவர் நடிப்பில் 'வின்னர்' படத்தை அடுத்து வெளியான அனைத்து திரைப்படங்களும் தோல்வியை தந்தது. இதனால் இவரின் மார்க்கெட் சரிந்தது. தற்போது அந்தகன் என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார்.

பிரசாந்தின் தந்தை
இந்நிலையில் பிரசாந்தின் தந்தை ஒரு பேட்டியில் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் " நான் பிரசாந்த் ஒரு டாக்டர் ஆக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என் சினிமா நண்பர்கள் அவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என பலரும் கூறினார்கள். இதன் பின் பிரசாந்தும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்" எனக் கூறியிருந்தார்.
