அப்பாவை வைத்து சோறுப்போட சொல்லுங்க!! அப்போதான் விஜய்யின் வாரிசு-க்கு மரியாதை.. தாக்கி பேசிய இயக்குனர்

Vijay Kasthuri Varisu S. A. Chandrasekhar
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வாரிசு படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இப்படம் தெலுங்கு திரைத்துறையில் வெளியிட சில பிரச்சனைகளை தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்படுத்தி வருகிறது.

இதற்கு பலர் ஆதரவாக விஜய்க்கு பேசி வந்தநிலையில் வாரிசு படம் தெலுங்கு சினிமாவில் வெளியாகும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விஜய்யின் வாரிசு அரசியல் - பின்னணி என்ன என்ற வாக்குவாதத்தில் நடிகை கஸ்தூரி, பத்திரிக்கையாளர் பிஸ்மி, பரத் இயக்குனர் பிரவீன் உள்ளிட்டவர்கள் விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது இயக்குனர் பிரவீன் காந்தி பேசுகையில், விஜய் மீது ஒரு வேண்டுகோள் இருக்கிறது. வாரிசு என்ற டைட்டில் இருக்கிறது, அப்பாவுக்கு பிரச்சனை இருப்பதை சரிசெய்வது என்பது தான் அப்படம் இருக்கும். வாரிசு என்ற டைட்டிலை வைத்துக்கொண்டு அப்பா கூட பேசாமல், சண்டைப்போட்டுக்கிட்டு, சம்பந்தமில்லை என்று கூறி வருகிறார்.

அது ரொம்ப தப்பான விசயம். எப்படி ரசிகர்களை கூப்பிட்டு சாப்பாடு போட்டு மரியாதை செய்தாரோ, அதேபோல் அப்பாவை கூப்பிட்டு மரியாதை செய்யவேண்டும். அப்பத்தான் வாரிசு என்ற டைட்டிலுக்கு மரியாதை என்று கூறியுள்ளார்.

ஊடல் போல இந்த சண்டை தெரியவில்லை. ரசிகர்களுக்கு கொடுக்கவேண்டிய அன்பை அப்பாவுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.