எல்லை மீறி போறீங்கடா.. வைரலாகும் ஜோடியின் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் வீடியோ

wedding viral photoshoot troll video fans shock pre wedding
By Tony Dec 02, 2021 11:55 PM GMT
Report

தற்போதைய காலகட்டத்தில் திருமணத்திற்கு முன் ஒரு போட்டோஷூட், திருமணத்தில் கேண்டிட் போட்டோகிராபி, ஹனிமூன் போட்டோஷூட், திருமணமான பின் சில நாட்கள் கழித்து போட்டோஷூட், கர்ப்பமானால் போட்டோஷூட் என இப்படி எக்கச்சக்க போட்டோஷூட்களை நடத்தத் தொடங்கிவிட்டார்கள்.

இப்படி பட்ட சில போட்டோஷூட் ஸ்டில்கள் அடிக்கடி இணையத்தில் வைரல் ஆவதையும் பார்க்க முடிகிறது. அதிலும் குறிப்பாக ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் ஸ்டில்கள் தான் அவ்வப்போது சர்ச்சைகள் ஏற்படுத்துகின்றன. சேற்றில் கட்டிப்புரண்டு உருளும் தம்பதி, பெட்ஷீட் உடன் ஓடும் தம்பதி என இதற்கு முன்பு பல முறை pre wedding போட்டோஷூட் ஸ்டில்கள் இணையத்தில் வைரல் ஆகி கடும் விமர்சனந்த்தை சந்தித்து இருக்கின்றன.

அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது. பெண்ணின் கால்களுக்கு நடுவில் தரையில் ஆண் படுத்திருப்பது போல தான் போட்டோ எடுத்திருக்கின்றனர். அந்த வீடியோ ஆபாசத்தின் உச்சமாக இருக்கிறது என பலரும் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

திருமணம் செய்ய இருக்கும் ஜோடியின் நெருக்கத்தை காட்டும் விதமாக இருக்கவேண்டிய ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் இந்த காலத்தில் அதிகம் வக்கிரமாக மாறி வருகிறது என பலரும் கருத்து கூறி வருகின்றனர்.