27 வயதில் மகள்.. கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை அகிலா கூறிய தகவல்

Serials Tamil TV Serials
By Kathick Jul 27, 2025 05:30 AM GMT
Report

சன் டி.வியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது சின்னத்திரை அறிமுகத்தை பெற்ற அகிலா, அதன்பிறகு, ராதிகா நடித்த செல்வி சீரியல் மூலம் சின்னத்திரை சீரியல்களில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை அகிலா பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்ப்பமாக இருந்ததால் ஒருவருக்கு ஒருமுறைதான் வளைகாப்பு நடக்கும். ஆனால், எனக்கு தினமும் வளைகாப்புதான். அபியும் நானும் சீரியலில் நடிக்கும்போது அந்த சீரியலின் இயக்குநர் எப்போமா என்னை தாய் மாமா ஆக்குவ என கேட்டுக்கொண்டே இருப்பார். 5வது மாதத்தில் எனக்கு வளைகாப்பு நடந்தது. விஷயம் தெரிந்து நான்தானே முதலில் வளையல் போடா வேண்டும், அதற்குள் யார் போட்டதுஎன்று என்னிடம் கோபித்துக்கொண்டார்.

27 வயதில் மகள்.. கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை அகிலா கூறிய தகவல் | Pregnant Serial Actress Akila Interview Viral

சீரியலில் என்னுடன் நடித்த பல நடிகைகள், எனக்கு தினம் தினம் வளைகாப்பு நடத்தி வருகிறார்கள். அபியும் நானும் சீரியலில் நடித்த முகில் என சிறுவனின் அம்மா என் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளார். அவர் வளைகாப்பு செய்யும்போது அனைத்து நகைகளும் அவர்தான் கொண்டு வந்தார். கோலங்கள் சீரியலில் எனக்கு அம்மாவாக நடித்த பாரதி அம்மாவும் எனக்கு வளைகாப்பு நடத்தினார்.

எனக்கு 27வயதில் ஒரு பொண்ணு இருக்கா. அவள் பெயர் அஸ்வதி. மலர் சீரியலில் ஹீரோயின் அவள்தான். அவளும் எனக்கு நண்பர்களுடன் சேர்ந்து வளைகாப்பு செய்தார். எனது குடும்பம் என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். அதை வெளி உலகில் யாரும் தெரிந்துகொள்ள நான் விரும்பவில்லை. அதனால்தான் சமூக வலைத்தளங்களில் எனது குடும்பம் குறித்து எந்த ஒரு பதிவும் நான் வெளியிடவில்லை. அவர்களுக்கு அது பிடிக்கவில்லை.

27 வயதில் மகள்.. கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை அகிலா கூறிய தகவல் | Pregnant Serial Actress Akila Interview Viral

அதே சமயம், எனக்கு நடிப்பு வாழ்க்கையில் எனது குடும்பத்தினர் சப்போர்ட் அதிகம். நான் மருத்துவர் ஆக வேண்டும் என விரும்பினேன். அப்போதுஎன்னால் முடியவில்லை, என்பதால் இப்போது அகாடமி டாக்டர் ஆக முயற்சித்து வருகிறேன். வேல்ஸ் யுனிவெர்சிடில் பி.எச்.டி பண்றேன். என் கணவர் எனக்கு எல்லா வகையிலும் துணையாக இருக்கிறார்.

உங்க வீட்டில் டாக்டர் ஆக்க வேண்டும் என்று நினைத்தது நடக்கவில்லை. அதனால் நீ இப்படி டாக்டர் பட்டம் வாங்கிவிடு என சொல்லி அவர்தான் என்னை பி.எச்.டி அடிக்க வைக்கிறார். கர்ப்பமாக இருந்தாலும், அவர்தான் என்னை அழைத்து சென்று மீண்டும் வீட்டுக்கு கூட்டி வருகிறார். என அகிலா மிகவும் மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.