18 வருஷமா ஒரு கப்பு கூட இல்ல!! ஆனா ரூ.3000 கோடியை அள்ளிய ப்ரீத்தி ஜிந்தா...

Punjab Kings Preity Zinta IPL 2026
By Jai Apr 26, 2026 10:00 AM GMT
Report

பஞ்சாப் அணி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த 18 ஆண்டுகளாக ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத அணியாக பஞ்சாப் கிங்ஸ் அணி திகழ்கிறது.இதனால் ரசிகர்களால் பஞ்சாப் அணி விமர்சனத்திற்குள்ளானது. அந்த அணியின் இணை உரிமையாளரும் பாலிவுட் நடிகையுமான ப்ரீத்தி ஜிந்தாவுக்கு இவ்வளவு லாபத்தை கொடுத்துள்ளது என்ற தகவல் வெளியாகி பலரையும் வாய் அடைக்கச் செய்துள்ளது.

18 வருஷமா ஒரு கப்பு கூட இல்ல!! ஆனா ரூ.3000 கோடியை அள்ளிய ப்ரீத்தி ஜிந்தா... | Preity Zinta Became Billionaire Being Punjab Kings

கோப்பையை வெல்லாத அணியால் எப்படி 8471 சதவீத லாபத்தை ஈட்ட முடிந்தது என்று வர்த்தக வட்டாரத்திலும் கிரிக்கெட் வட்டாரத்திலும் பேசுபொருளாகியுள்ளது.

8471 சதவீத லாபம்

கடந்த 2008 ஐபிஎல் தொடர் அறிமுகமானபோது பஞ்சாப் அணியின் 23 சதவீத பங்குகளை வெறும் 35 கோடி ஊபாய்க்கு ப்ரீத்தி ஜிந்தா வாங்கி இதுவரை 18 சீசன்களில் விளையாடி கோப்பையை வெல்லவில்லை. 2014 மற்றும் 2025 ஆகிய 2 சீசன்களில் மட்டுமே இறுதிப்போட்டி வரை முன்னேறியது. கேப்டன்களை அடிக்கடி மாற்றுவது, நிலையான அணி இல்லாதது என மோசமான அணி என்ற முத்திரையை பெற்றது.

18 வருஷமா ஒரு கப்பு கூட இல்ல!! ஆனா ரூ.3000 கோடியை அள்ளிய ப்ரீத்தி ஜிந்தா... | Preity Zinta Became Billionaire Being Punjab Kings

தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் வரவுக்கு பின் தற்போது யாரும் ஜெயிக்கவே முடியாத வலுவான அணியாக மாறியிருக்கிறது. தற்போதைய பஞ்சாப் அணியின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு ரூ. 15 ஆயிரம் கோடியாக எட்டியிருக்கிறது. இதில் 23 சதவீத பங்குகளை வைத்துள்ள ப்ரீத்தி ஜிந்தாவின் சொத்து மதிப்பு ரூ.3000 கோடி ரூபாய்க்கும் மேல் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

2008ல் ப்ரீத்தி முதலீடு செய்த 35 கோடி ரூபாய், 18 ஆண்டுகளில் சுமார் 8471 சதவீத அபிரிமிதமான லாபத்தை எட்டியுள்ளது. கோப்பையை வெல்லாவிட்டாலும் ஐபிஎல் அணிகள் எப்படி லாபம் சம்பாதிக்கிறது என்று பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம்.

18 வருஷமா ஒரு கப்பு கூட இல்ல!! ஆனா ரூ.3000 கோடியை அள்ளிய ப்ரீத்தி ஜிந்தா... | Preity Zinta Became Billionaire Being Punjab Kings

ஐபிஎல் அணிகளுக்கான பிரதான வருமானம் என்பது அவர்கள் பெறும் வெற்றியை மட்டும் சார்ந்தது கிடையாது, பிசிசிஐ மூலம் கிடைக்கும் தொலைக்காட்சி, டிஜிட்டல் ஒளிப்பரப்பௌ உரிமம், ஸ்பான்சர்கள், மைதான டிக்கெட் விற்பனை என பல வழிகள் மூலம் பணம் கொட்டுகிறது. குறிப்பாக ஒளிப்பரப்பு உரிமம் மட்டுமே 48 ஆயிரம் கோடிக்கும் மேல் விற்பனையாகியுள்ளது.