விஜயகாந்த் இறக்கும் போது என்ன நடந்தது, கடைசி நிமிடங்கள்- பிரேமலதா

Vijayakanth Tamil Cinema
By Yathrika Jan 25, 2024 12:30 PM GMT
Report

விஜயகாந்த்

கேப்டன் என தமிழக ரசிகர்களால் மிகவும் செல்லமாக அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். இவர் 2014ம் ஆண்டில் இருந்து உடல்நலக் குநைவால் வீட்டிலேயே முடங்கினார். 

கடந்த வருடம் டிசம்பர் 28ம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். 

டிசம்பர் 28ம் தேதி அதிகாலை 4 மணியளவில் மூச்சுத்திணறல் ஏற்பட மருத்துவர்கள் அவ்வளவு தான் கஷ்டம், உறவினர்களிடம் சொல்லி விடுங்கள் என கூறியுள்ளனர். 

பிரேமலதா விஜயகாந்த் கையை பிடித்துக்கொண்டு உங்களுக்கு ஒன்றும் ஆகாது என கூறியிருக்கிறார். 

ஆனால் 6.10 மணியளவில் விஜயகாந்த் அவர்கள் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். இந்த விஷயத்தை பிரேமலதா அண்மையில் கூறியிருக்கிறார்.

விஜயகாந்த் இறக்கும் போது என்ன நடந்தது, கடைசி நிமிடங்கள்- பிரேமலதா | Premalatha About Vijayakanth Last Minutes