தளபதி 68-ஐ உசார் செஞ்சதும் இப்படியா!! தம்பியுடன் குடியும் குடித்தனமுமாக இருக்கும் வெங்கட் பிரபு!!

Premji Amaren Venkat Prabhu Gossip Today
By Edward May 24, 2023 12:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் வெங்கட் பிரபு. சென்னை 28 படத்தினை இயக்கி ஆரம்ப படத்திலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். அதன்பின் சரோஜா, கோவா, மங்காத்தா, சென்னை 28 2, பிரியாணி மாஸ் என்கிற மாசிலாமணி போன்ற படங்களை இயக்கி வந்தார்.

அதன்பின் பல ஆண்டுகள் கழித்து சிம்புவை வைத்து மாநாடு என்கிற மிகப்பெரிய படத்தை கொடுத்து 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனையை பெற்றார்.

அப்படத்தினை தொடர்ந்து மன்மதலீலை, கஸ்டடி போன்ற படங்களை இயக்கி தோல்வியை சந்தித்தார். இந்நிலையில், நடிகர் விஜய்யின் 68வது படத்தினை இயக்கும் வாய்ப்பினை பெற்றிருக்கிறார் வெங்கட் பிரபு.

தளபதி 68ல் கமிட்டானது விஜய் ரசிகர்கள் வெங்கட் பிரபுவை தூக்கிவைத்து கொண்டாடி வருகிறார்கள். வெங்கட் பிரபு என்றாலே அவரது தம்பி பிரேம்ஜி அமரனும் ஒரு பங்கு வசிப்பார்.

அப்படி தளபதி 68 படத்திலும் பிரேம்ஜி இருப்பாரா என்று கேள்விகளை கேட்டுவருகிறார்கள் ரசிகர்கள். தற்போது பிரேம்ஜி டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

எப்போது பார்ட்டி வைத்து கொண்டாடும் பழக்கம் இருக்கும் பிரேம்ஜி இன்று பிரதர்ஸ் டே என்பதால் அண்ணனுடன் மது பாட்டிலுடன் எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கிண்டல் செய்தும் கலாய்த்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.