44 வயதில் 20 வயது பாடகியுடன் பிரேம்ஜி திருமணம்!! வினைதா கொடுத்த பதிலடி..
இயக்குனரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் மகன்களாக சினிமாவில் பிரபலமாகியவர்கள் வெங்கட் பிரபு, பிரேம்ஜி. இருவரும் தங்களுக்கான ஒரு இடத்தினை பிடித்ததோடு வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் தம்பி பிரேம்ஜியை நடிக்கவும் வைத்துவிடுவார்.
அப்படி மங்காத்தா, மாநாடு போன்ற படங்களை தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி68 படத்தில் பிரேம்ஜிக்கும் ஒரு ரோல் கொடுத்துள்ளார் வெங்கட் பிரபு. 44 வயதை தாண்டியிருக்கும் பிரேம்ஜி, இன்றுவரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார்.
சரக்கு பார்ட்டி என்று தன்னுடைய நண்பர்களுடன் நாட்களை கழித்தும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து நடிகைகளின் புகைப்படங்களுக்கு ஹாட்டின் விட்டும் வருகிறார். இந்நிலையில் புத்தாண்டு அன்று இந்த ஆண்டு நான் திருமணம் செய்து கொள்வேன், Dot என்று கூறியிருந்தார்.
தற்போது அவர் திருமணம் செய்யப்போகும் பெண் யார் என்று பலர் இணையத்தில் கசியவிட்டு வருகிறார்கள். இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன், 24 வயதான பாடகி வினைதாவை தான் திருமணம் செய்யப்போகிறார் என்று கூறியிருக்கிறார். ஆனால் இதுபற்றி வினைதா அவரது இணையத்தில் நான் திருமணம் செய்யவில்லை, Dotஎன்று கூறி பதிலடி கொடுத்திருக்கிறார்.
