படுஓல்லியாக மாறி அடையாளம் தெரியாமல் மாறிய நடிகர் பிரேம்ஜி... புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்

Premji Amaren
By Edward Sep 23, 2022 08:59 AM GMT
Report

கங்கை அமரன் வாரிசாக காமெடி நடிகராகவும் பின்னணி பாடகராகவும் இசையமைப்பாளராகவும் இருந்து வருபவர் பிரேம்ஜி அமரன். வல்லவன் படத்தில் ஆரம்பித்து மாநாடு படம் வரை முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது தனது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கிய மன்மதலீலை படத்திற்கு இவர்தான் இசையமைத்து கொடுத்துள்ளார். மேலும் சிவகார்த்திகேயனின் எஸ் கே 20 படத்தில் அவருக்கு வில்லனாகவும் நடித்து வருகிறாராம்.

42 வயதை எட்டிய பிரம்ஜி இன்னும் திருமணம் செய்யாமல கோவில் சினிமா என்று வாழ்க்கையை ஓட்டி வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரேம்ஜி நடிகைகள் சமுகவலைத்தளத்தில் பதிவிடும் புகைப்படங்களை பார்த்தும் ஜொள்ளுவிடும் விதமான ரியாக்ஷனை வெளியிட்டு வருவார்.

இதனை பார்த்த ரசிகர்கள் சீக்கிரம் திருமணம் செய்யுங்கள் என்று அறிவுரை கூறி வந்தனர்.

இந்நிலையில், குண்டாக காணப்பட்ட பிரேம்ஜி தற்போது படுஒல்லியாக ஆள் அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறார். ஒருவேலை திருமணத்திற்கு தான் இப்படி உடலை குறைத்திருக்கிறாரா என்று பலர் கலாய்த்தும் வருகிறார்கள்.


Gallery