ஒருதரையும் விட்டு வைக்குறது இல்ல! கேஜிஎஃப் நடிகைக்கு ரூட்டை போட்ட நடிகர்..
சினிமா நட்சத்திரங்கள் சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து நண்பர்கள் போடும் பதிவிற்கு பதிலோ அல்லது ரியாக்ஷன் இமோஜியை அனுப்புவது வழக்கம். அப்படி நடிகைகள் போடும் சமுகவலைத்தள புகைப்படங்களுக்கு ஜொல்லுவிட்டு ரியாக்ஷன் பதிவினை போட்டு வருகிறார் காமெடி நடிகர் ஒருவர்.
தமிழ் சினிமாவின் கங்கை அமரன் வாரிசாக காமெடி நடிகராகவும் பின்னணி பாடகராகவும் இசையமைப்பாளராகவும் இருந்து வருபவர் பிரேம்ஜி அமரன். வல்லவன் படத்தில் ஆரம்பித்து மாநாடு படம் வரை முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது தனது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கிய மன்மதலீலை படத்திற்கு இவர்தான் இசையமைத்து கொடுத்துள்ளார். மேலும் சிவகார்த்திகேயனின் எஸ் கே 20 படத்தில் அவருக்கு வில்லனாகவும் நடித்து வருகிறாராம்.
42 வயதை எட்டிய பிரம்ஜி இன்னும் திருமணம் செய்யாமல கோவில் சினிமா என்று வாழ்க்கையை ஓட்டி வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரேம்ஜி நடிகைகள் சமுகவலைத்தளத்தில் பதிவிடும் போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்து ஜொல்லுவிட்டு காமெடியான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்.
சமிபத்தில் கேஜி எஃப் பட நடிகை ஸ்ரீநிதி செட்டி போட்ட புகைப்படத்திற்கு ஹார்ட் இமோஜியை பகிர்ந்துள்ளார் பிரேம்ஜி. இதற்கு ரசிகர்கள் சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க அண்ணா என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
— PREMGI (@Premgiamaren) May 22, 2022