ரூ. 6300 கோடி சொத்து!! மது விற்பனையிலும் காசு பார்க்கும் ஷாருக்கான்..
ஷாருக்கான்
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராகவும் அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் ஷாருக்கான். நடிப்பதை தாண்டி ஐபிஎல் தொடரில் கல்கத்தா அணியை வாங்கி அதன்மூலம் சம்பாதித்து வருகிறார்.
நடிப்பு, கிரிக்கெட் என பல தொழில்களை செய்து கிட்டத்தட்ட ரூ. 6300 கோடி சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கிறார் ஷாருக்கான். சமீபகாலமாக அவர் நடிப்பில் வெளியான படங்கள் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது.
D'YAVOL
இந்நிலையில் ஷாருக்கான் சத்தமே இல்லாமல் ஒரு தொழில் மூலம் மிகப்பெரிய வருமானத்தை பெற்று வருகிறார். அதாவது புதிதாக மது விற்பனையை தன் மகன் ஆர்யன் கானுடன் இணைந்து டி’யாவோல் என்ற பிராண்டை விற்பனை செய்து வருகிறார். கடந்த ஆண்டு துவங்கப்பட்ட இந்த தொழிலில், அவரது பிராண்ட் மதுபானங்கள் சர்வதேச அளவில் பிரபலமடைந்துள்ளது.
ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் சர்வதேச மது போட்டியில் ஷாருக்கான் நிறுவனமும் கலந்துள்ளது. இதில் ஷாருக்கானின் கம்பெனி மது வகைகள் 100க்கு 95 சதவீத புள்ளிகளை பெற்று தங்கப்பதக்கத்தை பெற்றிருக்கிறது.
அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த மது போட்டியில் டி’யோவோல் பிராண்ட் ஸ்கார்ச் விஸ்கி சிறந்த பிராண்ட் மதுபானம் என்ற விருதினை பெற்றிருக்கிறது. 4 வகையான பிராண்ட்களை ஷாருக்கானின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
அதில், டி’யாவோ சிங்கில் எஸ்டேட் வோட்கா ஒரு பாட்டில் ரூ. 5000க்கும், விஸ்கி ரூ. 6300க்கும் விற்பனை செய்யப்படுகிறது. டி’யாவோல் ப்ரீமியம் ஸ்காட்ச் விஸ்கி மகாராஷ்டிராவில் ரூ. 5350க்கும் கோவாவில் ரூ. 4500க்கும் விற்பனையாகிறது.கியுள்ளது. அதாவது படம் நன்றாக இருப்பதாகவும் தமிழ் சினிமாத்துறையின் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று கூறியுள்ளனர்.