அடப்பாவிங்களா!! கலாய்த்த நெட்டிசன்கள்!! நடிகை பிரியா பவானி சங்கரின் கதறல்ஸ்..
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் ஜூலை 12 ஆம் தேதி உலகளவில் வெளியாகியுள்ள படம் இந்தியன் 2. படம் வெளியாகி கலவையான சிமர்சனங்களை பெற்று வந்தாலும், நடித்த நடிகர்களை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகிறார்கள்.
சித்தார்த் ஆடியோ லான்ச் மற்றும் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் நடந்து கொண்டதை வைத்து அவரை பயங்கமாக கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
அவரை போல் படத்தில் நடித்த நடிகை பிரியா பவானி சங்கரையும் நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர். படத்தில் நடித்த சில காட்சிகளை வைத்து நெட்டின்சன்கள் மீம்ஸ் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.
இதனை பார்த்த பிரியா பவானி சங்கர், இது வெறும் கதறல்ஸ் பாடலில் பிரியா பவானி சங்கர் என்று கூறியிருக்கிறார். இதற்கு பலர் பிரியா பவானி சங்கரை கலாய்த்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

