காசுக்காக நடிக்கிறேன்!! படுகேவலமாக விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த நடிகை பிரியா பவானி சங்கர்...
சின்னத்திரை தொலைக்காட்சி சேனலில் செய்திவாசிப்பாளராக இருந்து பின் சீரியல் நடிகையாக பிரபலமானவர் பிரியா பவானி சங்கர்.
இதனை தொடர்ந்து மேயாத மான் படத்தில் வெள்ளித்திரை நடிகையாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் ஏசிஆர் பகுதியில் பங்களாவை கட்டி குடியேறினார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டியொன்றில், சினிமாவில் நுழைய கஷ்டப்பட்டதாகவும் வாய்ப்புகள் கிடைக்க கடினமாக உழைத்ததல் தான் பணம் கிடைத்ததால் அதற்காக படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறியிருந்தார். பணம் சம்பாதிப்பதைவிட நல்ல கதையில் நடிக்க வேண்டும் என முடிவெடுப்பதாக கூறியிருந்தார்.
ஆனால் இதை சிலர் பணத்திற்காக நடிக்கிறேன் என்று பிரியா பவானி சங்கர் கூறியதாக செய்திகளை பரப்பியுள்ளனர். இந்நிலையில் இதையறிந்த பிரியா பவானி சங்கர், டிவிட்டரில் பதிலடி கொடுத்து ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.
?? https://t.co/1qM68L8xBc pic.twitter.com/3Xu6wNvnQd
— Priya BhavaniShankar (@priya_Bshankar) January 19, 2023
பணத்திற்காக தான் சினிமாவில் நடிக்கிறேன் என்று சொல்லவே ஒல்லை. அப்படி நான் சொல்லியிருந்தாலும் என்ன தப்பு. எல்லோரும் பணத்திற்காகத்தான் வேலை பார்க்கிறோம்.
நடிகர் நடிகைகள் அப்படி காசு வாங்குவதை ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று கூறியதோடு “மாப்ள சொம்பு கொடுத்தா தான் தாளி கட்டுவாறாம்” என்பது போல் மீடியா நடந்துகொள்கிறது என ஆரம்பித்து ஒரு பதிவினை போட்டு பதிலடி கொடுத்துள்ளார்.