20 வயசுல எனக்கு கல்யாணமாகி இருந்தா..நடிகை பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்..
பிரியா பவானி சங்கர்
செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சின்னத்திரை நடிகையாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். தற்போது வெள்ளித்திரையிலும் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் பிரியா பவானி சங்கர், சமீபத்தில் தெலுங்கில் ரவி தேஜாவுடன் இருமுடி படத்தில் நடித்தார்.
]
படமும் ரிலீஸாகி அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்து வரும் நிலையில், பேட்டியொன்றில் சில விஷயங்கலை பகிர்ந்திருக்கிறார்.
குழந்தைக்கு அம்மாவா
அதில், ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பதில் எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை. எனக்கு 20 வயதில் திருமணமாகி இருந்தால் குழந்தையிலிருந்து இருக்கும் அதனால், அம்மாவாக நடிப்பதில் எனக்கு தயக்கம் இல்லை.

ஆனால் கதை என்னவாக இருக்கப்போகிறது என்பதைத்தான் யோசித்தேன். இந்த கதையை முதன்முதலில் கேட்டபோதே மிகவும் இண்டென்ஸாகவும், ஆன்மாவைத் தொடும் வகையிலும் இருந்தது.
இயக்குநர் ஸ்கிரிப்டை கொடுக்கும்போதே கதை எந்த திசையில் செல்லப்போகிறது என்பது எனக்கு தெளிவாக தெரிந்தது. நான் பேப்பரில் படித்ததும், நான் கேட்டதும்தான் திரையில் அப்படியே வர வேண்டும் என்பதுதான் என் ஒரே கவலையாக இருந்தது என்று பேசியிருக்கிறார் பிரியா பவானி சங்கர்.