வாய்ப்பிற்காக நடிகர்களுடன் நெருக்கம் காட்டும் நடிகை பிரியா! கோபத்தில் காண்டாகும் காதலன்..
பிரபல செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இதையடுத்து சின்னத்திரையில் சீரியல் நடிகையாக கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இதையடுத்து கடைக்குட்டி சிங்கம், மேயாத மான் போன்ற படங்கள் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் பிரியா பவானி சங்கர் போட்டோஷூட்டில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.
தற்போது தொடர்ந்து வரிசையாக பல படங்களில் கமிட்டாகி கோலிவுட்டில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். ஆம், இவர் நடிப்பில் தற்போது ருத்ரன், குருதி ஆட்டம், யானை, பத்து தல உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன.
இந்நிலையில் படவாய்ப்புக்காக எந்த அளவிற்கு போக தயாராகியுள்ள பிரியா பவானி நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளிலும் நடித்து வருகிறார். ஏற்கனவே 10 ஆண்டுகளாக ஆண் நண்பர் ஒருவரை காதலித்து வரும் பிரியா பவானி சங்கர் இப்படி செய்வது அவருக்கு சங்கடத்தை கொடுப்பதாக கூறப்படுகிறது.
ஓமணப் பெண்ணே என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதிலிருந்து இவர் அந்தப் படத்தின் ஹீரோ ஹரிஷ் கல்யாணுடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறார்.
பொது இடங்களிலும், பட விழாக்களிலும் இவர்கள் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டு வருகின்றனர். அதில் இருவரும் மீடியாவுக்கு ஜோடியாக போஸ் கொடுப்பது கேலி கிண்டல் செய்வது என காதலரை வெறுப்பேற்றும் வகையில் அவரின் நடவடிக்கையுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜிம் கோச், ஹரிஷ் கல்யாணுடன் அவர் செய்வது மீடியாவில் கிசுகிசுப்பதால் காதலர் என்ன சொல்வார் என்றும் தெரியவில்லை. அவருக்காக அதை எல்லாம் குறைப்பாரா இல்லை அவரை நிராகரிப்பாரா பிரியா என்று கிண்டல் செய்தும் வருகிறார்கள்.