அந்த நடிகையை இப்படி எடிட் செய்யுங்க! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான பிரியா..

memes tamilactress Priya BhavaniShankar
By Jai Dec 17, 2021 11:00 AM GMT
Report

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை பிரியா பவானி சங்கர். செய்தி வாசிப்பாளர், சீரியல் நடிகை என ஆரம்பித்த வாழ்க்கை தற்போது முன்னணி நடிகை என்ற இடத்திற்காக உழைத்து வருகிறார் பவானி.

ரசிகர்கள் பலர் நடிகைகளுடன் இருப்பது போன்ற புகைப்படங்களை எடிட் செய்து வெளியிட்டு வருவது சகஜம். அப்படி பிரியா பவானி சங்கரை வைத்து எடிட் செய்து தர முடியுமா என்று நடிகர் நானியின் கிரீன்மேட் புகைப்படத்தை ஒருவர் வெளியிட்டுள்ளார்.

அதற்கு நெட்டிசன் ஒருவர் பிரியா, பவானி, சங்கர் மூவரை வைத்து எடிட் செய்து புகைப்படத்தை கொடுத்துள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து நடிகை பிரியா பவானி சங்கர் இதனை பார்த்துள்ளார். அடப்பாவிங்களா என்று ஷாக்காகி சிரிப்பது போன்று அதை பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.