என்ன பிரியா இதெல்லாம்! காசுக்காக விளம்பரத்தில் இப்படி பண்ணாதீங்க?
செய்தி வாசிப்பாளராக பணியாற்றி சீரியல் நடிகையாக இருந்து பின் வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை என்ற இடத்திற்கு வந்துள்ளவர் நடிகை பிரியா பவானி சங்கர்.
சின்னத்திரையில் சீரியல் நடிகையாக கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று மேயாத மான் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
அதன்பின் அடுத்தடுத்த தமிழ் படங்களில் கமிட்டாகிய பிரியா சமீபத்தில் க்ளாமர் ரூட்டிற்கும் தாவி நடித்து வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் லைக்கிற்காகவும் பணம் சம்பாதிக்கவும் விளம்பரத்தில் நடித்தும் வருகிறார் பிரியா பவானி சங்கர்.
அந்தவகையில் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் விற்கும் இளநீர் விளம்பரத்தில் நடித்துள்ளார்.
அதன் வீடியோவை பகிர்ந்து பிரமோஷன் செய்த பிரியா பவானி சங்கரின் வீடியோவை பார்த்து ரசிகர்கள் கண்டபடி திட்டியும் காசுக்காக இப்படி விளம்பரம் செய்யும் உங்களால் விவசாயிகள், ரோட்டோர விற்பனையாளர்களின் வாழ்வாதாரம் என்ன ஆகும் தெரியுமா? என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
