ECR-ல் பல கோடியில் பங்களா!! பிரியா பவானி சங்கரின் சீக்ரெட்டை உடைத்த பயில்வான்
செய்தி வாசிப்பாளராக பிரபல தொலைக்காட்சியில் பணியாற்றி பின் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை பிரியா பவானி சங்கர்.
இதனை தொடர்ந்து வெள்ளித்திரையில் மேயாத மான் என்ற படத்தின் வாய்ப்பினை பெற்று கதாநாயகியாக அறிமுகமாகினார். பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து 20 லட்சம் சம்பளம் வாங்கும் நடிகையாக மாறி வருகிறார்.
இந்நிலையில் 18 வயதில் பீச்சிற்கு சென்றால் இங்கு ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை தற்போது நிறைவேறியுள்ளது என்று தன் காதலருடன் மாறிமாறி முத்தமழை பெய்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
ஈசிஆர் ரோட்டில் நிலம் வாங்கினாலே கோடியில் வாங்கி கோடியில் வீடு கட்டும் நிலை உருவாகும். அதுவும் ஒரு முக்கிய ரோல் படத்துக்கு 20 லட்சம் வாங்கும் நடிகை.
அப்படி எப்படி பெரிய ஆடம்பர பங்களா கோடியில் வாங்கி பிரியா பவானி சங்கர் கட்டியிருப்பார் என்று பயில்வான் விமர்சித்திருந்தார்.
ஆனால் இந்த வீட்டினை சில ஆண்டுகளுக்கு முன்பே பிரியா பவானி சங்கர் வாங்கியிருக்கிறார். அங்கு சென்று எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிரிந்துள்ளார்.



